சதித்திட்டம் தீட்டும் அமெரிக்கா - இந்தியா! சிக்கியது இலங்கை
கொழும்பு துறைமுக நகர திட்டத்தை சீர்குலைக்க அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சதிசெய்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடக சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்ட அவர்,
துறைமுக நகரம் அமைய வேண்டியது அத்தியாவசியமானது. இது ஒருபக்கம் அமெரிக்காவிற்கு கஸ்டத்தை கொடுத்துள்ளது. மறுபக்கம் இந்தியாவிற்கு பிரச்சினையை கொடுத்துள்ளது. அதனால் எப்படியாவது இதனை நிறுத்த சதி செய்கின்றனர்.
அதற்கென அவர்களது முகவர்களை இலங்கைக்குள் செயற்படுத்த முயற்சிக்கின்றனர். அமெரிக்க தூதுவர் கூட இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிகிறது.
இலங்கையில் பொருளாதார வளர்ச்சியின் திருப்பு முனையாக இது அமையும்.
இந்தப் போர்ட் சிட்டி திட்டத்தை குழப்புவதற்கு இவர்கள் சதி செய்கின்றனர். எல்லா பக்கங்களிலும் இருந்து அதுவே தெளிவாக விளங்குகிறது என அவர் கூறியுள்ளார்.