இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் முதல் 10 வெளிநாடுகளின் பட்டியலில் இலங்கை
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு சென்ற அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முதல் 10 நாடுகளில் இலங்கை, அமெரிக்கா, பங்களாதேஷ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை அடங்கும் என இந்திய அரசாங்கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மக்களவையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த இந்திய கலாசார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இந்தத் தரவைப் பகிர்ந்து கொண்டதாக இந்தியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு 9.95 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய்
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் தொற்றுநோய்க்குப் பின்னர் இந்தியாவின் சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்க மீட்சியைக் கண்டதா, சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட அதிகமாக உள்ளதா என்பது தொடர்பான விவரங்கள் அமைச்சரிடம் கேட்கப்பட்டன.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை (FTAs) மற்றும் வெளிநாட்டு குடிமக்களின் வருகை என இரண்டு கூறுகளைக் சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை (ITAs) கொண்டுள்ளதாக ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்த முதல் பத்து மூல சந்தைகள் பற்றிய விபரங்களும் அமைச்சரிடம் கேட்கப்பட்டன.
ஷெகாவத் தனது பதிலில், கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-2024) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான முதல் 10 மூல நாடுகளின் அட்டவணைப்படுத்தப்பட்ட தரவைப் பகிர்ந்து கொண்டார்.
மூல சந்தையாக பங்களாதேஷ்
தரவுகளின்படி, இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளாக அமெரிக்கா, பங்களாதேஷ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, மலேசியா, இலங்கை, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகியன குறிப்பிடப்பட்டன.
2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை முதல் மூல சந்தையாக பங்களாதேஷ் இருந்தது, அதேவேளை 2021, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது.
இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை முதல் ஐந்து மூல நாடுகளில் இடம்பிடித்த மற்ற மூன்று நாடுகள் பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
