இரு குழுக்களுக்கிடையிலான வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!
அக்கரைப்பற்று பகுதியில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் பகுதியிலேயே இந்த கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், சின்ன முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 33 வயதானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோடரியால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த நபர், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் போது சந்தேக நபரும் காயமடைந்துள்ள காரணத்தினால், காவல்துறை பாதுகாப்பின் கீழ் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சடலம் தொடர்பான பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், அக்கரைப்பற்று காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 10 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்