இராணுவ வீரர்களுக்கு பதவியுயர்வு : வெளியான தகவல்
Sri Lanka Army
Ranil Wickremesinghe
Sri Lanka
By Shalini Balachandran
உள்நாட்டுப் போரில் தேசம் வெற்றி பெற்றதன் 15 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், 1509 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
வீரர்களுக்கு பதவி உயர்வு
இந்த நிலையில், பதவி உயர்வுகளில் 114 அதிகாரிகள் மற்றும் 1395 பேர் இதர தரவரிசைகளில் அடங்குவதுடன் அவர்கள் அனைவரும் அந்தந்த பதவிகளுக்குள் அடுத்த நிலைக்கு முன்னேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் (ranil wickremesinghe) அனுமதியுடன் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவினால் (Vikum Liyanage) இந்த பதவி உயர்வுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்