குவைத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
srilanka
bandaranaike
By Vasanth
வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைத் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட 112 இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். கொரோனா தொற்று சூழ்நிலையில் அவர்கள் தமது பணிபுரியும் இடங்களை விட்டு வெளியேறிய நிலையிலேயே குவைத் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களது தரவுகளை பதிவு செய்யும்வகையில் சிஐடியால் இந்த குழு கைது செய்யப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.