புற்று நோய்யை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்யை தடை செய்யும் வர்த்தமானி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
தேங்காய் எண்ணெயில் அஃப்லாடொக்ஷின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக முழுமையான தொழிநுட்ப வசதிகள் தமது நிறுவனத்திடம் மாத்திரமே உள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் பெறப்பட்ட 56 தேங்காய் எண்ணெய் மாதிரிகள் தமக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நுகரப்படும் தேங்காய் எண்ணெய்யில் எந்தவொரு இரசாயனத்தையும் கலப்பதற்கு தடைவிதித்து இதுவரையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வர்த்தமானி வெளியிடப்படவில்லை என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அந்த சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா இதனை தெரிவித்தார்.
இதுவரையில் தமது தரப்பிற்கு 4 தேங்காய் எண்ணெய் மாதிரிகள் மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதன் முடிவுகள் நுகர்வோர் அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.