தீவிரவாதம் மற்றும் மனித கடத்தல் வியாபாரம் என்பவற்றை இல்லாதொழித்தல் தொடர்பிலான இரு நாட்டு இணக்கம்!
தீவிரவாதம் மற்றும் மனித கடத்தல் வியாபாரம் ஆகியவற்றை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
அதேவேளை இரு நாட்டு பிரதமர்களின் முன்னிலையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஸ்ரீலங்காவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இன்று டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் இடம் பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது பொருளாதாரம், முதலீடு,சந்தை, தொழிநுட்பம், விவசாயம், கடற்றொழில் கைத்தொழில் மற்றும் அரசியல் உறவு ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டன.
இதேவேளை கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனா பாராட்டினை தெரிவித்தார்.
பங்களாதேஷ் நாட்டு மக்களை பாதுகாக்க விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பங்களாதேஷ் பிரதமர் தெரிவித்தார். மேலும் சார்க் அமைப்பு கொவிட்-19 அவசர நிதியத்தின் ஊடாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வைத்திய உபகரணங்களை வெகுவிரைவில் ஸ்ரீலங்காவிற்கு வழங்கும் என பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனா உறுதியளித்தார்.
ஸ்ரீலங்கா மாணவர்கள் பங்களாதேஷ் நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை பயிலும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த பிரதமர் ஷெயிக் ஹசீனா உயர் கல்வியை பெற்றுக் கொள்ள ஸ்ரீலங்கா மாணவர்களை பங்களாதேஷிற்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவையை விரிவுப்படுத்தி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளை முன்னேற்றுவது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டது. அடுத்த வருடம் ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகப்பூர்வமான விஜயத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனா ஏற்றுக் கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 50ஆவது வருட ஆரம்பத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையில் விரிவுப்படுத்தப்பட்ட அரசியல் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலான யோசனைகள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. இச்சந்திப்பின் போது இளைஞர் விவகாரத்தை அபிவிருத்தி செய்தல், விவசாயத்துறை,திறன் அபிவிருத்தி பறிமாற்றல்,
சுகாதார தாதிகள் சேவை பறிமாற்றம், அனைத்துலக ஒத்துழைப்பு கல்வி மற்றும் 2021-2025 வரையிலான அனைத்து கலாசார பறிமாற்றம் செயற்திட்டம்





