சர்வதேசமே நீதியைப்பெற்றுத்தா! பல கோசங்களுடன் மட்டக்களப்பில் போராட்டம் (படங்கள்)

batticaloa police sri lanka people
By Thavathevan Mar 07, 2022 01:12 PM GMT
Thavathevan

Thavathevan

in இலங்கை
Report

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நியாயம் கிடைக்க சர்வதேசம் தலையிட வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் ஒன்றுகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி வரையில் சென்று அங்கு கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் கோறளைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலைசெய், தமிழினப் படுகொலைக்கான சர்வதேச நீதி,பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் காரணமாக காந்திபூங்காவில் பெருமளவான காவல்துறையினரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டிருந்ததுடன் பெருமளவானோர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். எங்கே எங்கே எமது குழந்தைகள் எங்கே, ஐ.நாவே நாம் அழுவது உமக்கு கேட்கவில்லையா?, சர்வதேசமே நீதியைப்பெற்றுத்தா?, குடும்பம், குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறார்கள் எங்கே?, சிறுவர்களைக் கடத்திவிட்டு அரசே சிறுவர் உரிமை பற்றிப் பேசாதே, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறக்கமாட்டோம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016