புதிய நிறுவனத்தின் ஊடாக கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை விற்பனை செய்யத் திட்டம்! அம்பலமான தகவல்
நாடு வெறுமையான நிலைக்கு சென்றுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்காவின் மொத்த தேசிய வருமானம், கடனைகளை திருப்பி செலுத்தவும் போதுமானதாக இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாடு திவாலான நிலைமைக்கு சென்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், பெற்ற கடன்களை கட்டித் தீர்க்க முடியாத நிலைமையில் அரசாங்கம், கொழும்பில் உள்ள பெறுமதியான சகல காணிகளை விற்பனை செய்ய, லென்திவா என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த காணிகளை விற்பனை செய்வதன் மூலம் 400 மில்லியன் டொலர்களை சம்பாதிக்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது மிக குறைந்த வருவாய் எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 10 மணி நேரம் முன்