ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்! விசாரணை அறிக்கை தொடர்பில் அரச சட்டவாளர் வெளியிட்ட தகவல்
srilanka
blast
court
bomb
By Vasanth
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் விசாரணை அறிக்கை மற்றும் தகவல்கள் முழுமையானவை இல்லை என சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாளர் நிஷாரா ஜயரத்ன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு தாமதமின்றி தகவல்களை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து அமைச்சரவை பேச்சுவார்த்தை ஒன்று விரைவில் இடம்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி