விகாரைக்குள் நடக்கும் பாலியல் தொழில்- காவி உடைக்குள் மறைந்திருக்கும் நபர்; அம்பலமான தகவல்கள்!
பிரதேசவாசிகள், பௌத்த மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, குருணாகல் மாவட்டம் பொத்துஹெர, அரம்பேபொல பிரதேசத்தில் விகாரை என்ற பெயரில் பாலியல் தொழில் விடுதியை நடத்தி வருவதாக “துக்க ஹந்துனன அபி” என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த இடத்தில் விகாரை இயங்கினாலும் ஹொட்டல் என்று அந்த கட்டடம் பதிவு செய்யப்பட்டுள்ளது என அந்த அமைப்பின் தலைவர் நிலந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரே விகாரை அமைந்திருந்த இடத்தை விற்பனை செய்துள்ளார். விகாரைக்குள் இந்த ஹொட்டல் இயங்குகிறது. சீன விகாரை என அழைக்கப்படும் இந்த ஹொட்டலில், சீனப் பெண்கள் தங்கியுள்ளனர்.
பிரதேசவாசிகளுக்கு விகாரையில் நடப்பது என்ன என்பது தெரிந்து அவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஹொட்டலில் உள்ள சீனர்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப் பிராணிகளை கொன்று சாப்பிடுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.
இந்த ஹொட்டல், அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் காவல்துறை தலையீட்டில் இயங்கி வரும் பாலியல் தொழில் நிலையம். இதனை தடைசெய்யுமாறு மாநாயக்க தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், முக்கியமான அரசியல்வாதிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த விகாரையில் இருக்கும் பிக்கு துறவறம் பூண்டு பின்னர், காவியை கழற்றி விட்டு, திருமணம் செய்துக்கொண்டவர். எனினும் பிக்கு என்ற பெயருடன் கூடிய கடவுச்சீட்டில் சீனாவுக்கு சென்று மகாயான பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார்.
தனது மனைவியுடன் இணைந்து லெனின் சரத் லியனகே என்ற பெயரில் தேர்தலிலும் வாக்களித்துள்ளார். அரம்பேபொல பிரதேசத்திற்கு வந்து கின்ஹெலியே சீலானந்த என்ற பெயரில் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
இந்த பிக்கு ஒன்பது பெயர்களில் வங்கி உட்பட பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். தொலைக்காட்சிகளில் தோன்றி உரையாற்றும் பிக்குகளில் பலர் இந்த ஹொட்டலுக்கு வந்து செல்கின்றனர்.
அங்குள்ள பௌத்த பிக்குகளுக்கு பெண்களை வழங்கி, அவர்களை அச்சுறுத்தி வருவதாகவும் பிக்குவின் மகன் வாகன கொள்ளையில் ஈடுபடும் நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விகாரைக்கு பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
அங்கு மசாஜ் பணிகளில் சீனப் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இலங்கையில் உள்ள பல அரசியல்வாதிகள் அங்கு வருகின்றனர். காவியை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்திற்கு செல்லும் ரத்ன தேரரிடம் இருந்து முதலில் நாட்டை காப்பாற்ற வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக ரத்ன தேரரிடம் எந்த இடத்திலும் எந்த தொலைக்காட்சியில் விவாதத்திற்கு வர தயாராக இருப்பதாகவும் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தள காண் ஒளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
