மத்திய வங்கி நாணய மாற்றாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கை மத்திய வங்கி நாணய மாற்றாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
அதன்படி உரிமம் பெற்ற வங்கிகளினால் குறிப்பிடப்பட்ட வீதங்களைத் தாண்டிய வீதங்களில் ஏதேனும் வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களை நாணய மாற்றாளர்கள் மேற்கொள்வார்களாயின் அவர்களது உரிமங்கள் இடைநிறுத்தப்படும் அல்லது இரத்துச் செய்யப்படும் என நாணய மாற்றுநர்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, மேற்குறிப்பிட்ட வகையில் செயற்படும் நாணய மாற்றாளர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு புறம்பாக நாணய மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவது 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணி சட்டத்துக்கமைய தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

