தேங்காய் அறுவடை தொடர்பில் வெளியான தகவல்
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அஜித் ஜெயவர்த தெரிவித்துள்ளதாவது, “ 2024 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
தேங்காய் அறுவடை
இதேவேளை இந்த ஆண்டில் , தோராயமாக 555 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு ஒரு தேங்காயின் விலை ரூ. 163 ஆகநிர்ணயிக்கப்படும்போது தேங்காய் அதிகமுள்ள பகுதிகளில் இது நாட்டின் தேங்காய் தொழிலுக்குரிய குறிப்பிடத்தக்க ஊக்கமாகும் என்பதோடு இதனை "தேங்காய் முக்கோணம்" என்று அழைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த சில நாட்களாக இலங்கையில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
மேலும் 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய், 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் (Coconut Cultivation Board) தலைவர் சுனிமல் ஜயக்கொடி (Sunimal Jayakody)தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
