விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி
srilanka
colombo
By Vasanth
மண்ணெண்ணெய் விலையை 10 வீதத்தால் அதிகரிக்க அனுமதி கோரி எரிசக்தி அமைச்சு அமைச்சரவைக்கு அறிக்கை அளித்துள்ளது.
மண்ணெண்ணெய் மானியத்தை திருப்பிச் செலுத்துவதற்கும், கச்சா எண்ணெய் மீதான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியை திருத்துவதற்கும் பெப்ரவரி மாதம் எரிசக்தி அமைச்சகம் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தது.
இதற்காக பொருத்தமான ஒரு பொறிமுறையை அமைக்க பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு 8 ஆம் திகதி கூடி மண்ணெண்ணெய் விலையை 10% அதிகரிக்க முடிவு செய்தது.
இதற்கு மீன்வள அமைச்சும் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 70 ரூபாய். 10% அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி அளித்தால், ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ .77 ஆக உயரும்.