கைது செய்யப்படுவாரா சமல் ராஜபக்ச?
srilanka
colombo
By Vasanth
சிங்கராஜ வனப்பகுதியில் இரண்டு குளங்களை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள நீர்வழங்கல் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உடனடியாக கைது செய்யவேண்டும் என்று மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அந்த அமைப்பின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர இதனை தெரிவித்தார்.
சிங்கராஜ தேசிய வனப்பகுதிக்கு இடையே இரண்டு குளங்களை அமைப்பதற்கான அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டிருக்கின்றார். இதற்காகவே அவர் கைது செய்யப்பட வேண்டும்.
இது மிகவும் சூழல் மாசு சார்ந்த திட்டமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கராஜ வனப்பகுதியில் இரண்டு குளங்களை அமைக்கவுள்ளதாக நேற்றையதினம் நாடாளுமன்றில் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.