இறுதி நாள் வரை முயற்சி: அமெரிக்காவுக்கு தொடர் அழுத்தம் கொடுக்க இலங்கை அரசு முடிவு!
30% வர்த்தக வரி குறித்து அமெரிக்காவுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் முதலாம் திகதி இறுதி வரை மேலும் கலந்துரையாடல்கள் நடைபெறும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் காரணமாக அமெரிக்கா விதித்த 44% வரியை 30% ஆகக் குறைப்பது சாத்தியமானதாகவும் ஹர்ஷன சூரியப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி மீளாய்வு
இந்த நிலையில், இலங்கை ஏற்றுமதிகளின் மீது ஓகஸ்ட் முதலாம் முதல் 30% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அமெரிக்க மீது விதித்துள்ள வர்த்தகத் தடைகளை நீக்குமாயின், அமெரிக்கா விதித்துள்ள வரிகளை மீளாய்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
