ராஜபக்சவினர் காரணமாக இலங்கை தொடர்ந்தும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது:பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம்
இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இருக்கும் ராஜபக்சவினரின் சம்பந்தம் காரணமாக நாடு தொடர்ந்தும் அரசியல் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக உலகின் பிரதான கடன் தரப்படுத்தல் நிறுவனமான பிச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) நிறுவனம் தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளதுடன் அவரது அரசாங்கம், சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு அரசாங்கம் வலுவாக இருக்கின்றது என தெரிந்தாலும் அரசாங்கத்திற்கான பொது மக்களின் ஆதரவு பலவீனமான நிலையில் இருக்கின்றது.
நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் பலத்தை தற்போதும் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியே கையில் வைத்திருப்பதாகவும் பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.