உலக நாடுகளில் தீவிரமடைந்துள்ள ஒமைக்ரோன்- பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வறிக்கை!
vaccine
corona
booster
omicron
By Kalaimathy
பிரித்தானியாவில் ஒமைக்ரோன் வைரஸ் திரிபு வேகமாக பரவிவருகின்ற நிலையில் இதுவரை 93,000 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற மூன்றாவது தடுப்பூசியாக பயன்படுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசியானது, ஒமைக்ரோன் திரிபினால் ஏற்படக்கூடிய 85 சதவீதமான தீவிர நோய் நிலைமைகளை தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியா ஆய்வுக்குழுவொன்று இதனை கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசி மூலம் ஒமைக்ரோன் தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது கணிசமான அளவு குறைவடைவதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி