இன்றும் 1,897 தொற்றாளர்கள் பதிவு
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,897 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 117,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 922 பேர் இன்று (05) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,075 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 720 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்