இலங்கையில் 2,142 புதிய தொற்றாளர்கள் கண்டறிவு
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 2,142 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை 215,538 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,811 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 182,238 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.