இலங்கையில் எகிறும் கொரோனா - இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
srilanka
covid 19
virus patient
By Vasanth
இலங்கையில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணியின் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,036 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 372 பேர் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 7 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி