இலங்கையில் கொரோனாவால் மேலும் எண்மர் உயிரிழப்பு
இலங்கையில் இன்றையதினம் 8 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.இதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தால் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இகிரிய பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண்ணொருவர் கொவிட் நிமோனியாவால் கடந்த முதலாம் திகதி கண்டி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர் கொவிட் நிமோனியாவுடன் ஏற்பட்ட சுவாச கோளாறினால் கடந்த முதலாம் திகதி முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
புவக்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆணொருவர் கொவிட் நிமோனியா, இரத்தம் நஞ்சானமை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் என்பவற்றால் கடந்த முதலாம் திகதி முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 14 ஐ சேர்ந்த 90 வயதுடைய ஆணொருவர் இரத்தம் நஞ்சானமை , கொவிட் நிமோனியா என்பவற்றால் மார்ச் 31 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இன்று மாலை அரசாங்க தகவல் திணைக்களதகவலின்படி மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றின் விபரம் வருமாறு,
அக்குறணை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவரும், ரம்புக்கணை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஆணொருவரும், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவரும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.