கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,995 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 498 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 551,343 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 13, 442 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 426 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 523,929 ஆக அதிகரித்துள்ளது.