மேலும் 24 கொவிட் மரணங்கள் இலங்கையில் பதிவு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 24 பேர் நேற்றையதினம் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,182 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்று உறுதியான மேலும் 542 பேர் இன்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 558,662 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்