மேலும் 23 பேரை பலியெடுத்தது கொரோனா! தொற்று எண்ணிக்கையும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,205 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 12 பெண்களும் 11 ஆண்களும் உள்ளடங்குவதாக இன்று (24) வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுறுதியான மேலும் 518 பேர் இன்று (24)இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 559,378 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்