கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 27 கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 19 ஆண்களும், 08 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14, 232 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுறுதியான மேலும் 529 பேர் இன்று இதுவரை, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 560,134 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்