மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு
covid
today
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் நேற்று மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,346 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 07 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 527 பேருக்கு இன்று இதுவரை கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 563,794 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்