இலங்கையில் மேலும் 7 கொவிட் மரணங்கள் பதிவு
covid
today
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 7 பேர் கொவிட் தொற்றால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,218 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 02 பெண்களும் 05 ஆண்களும் உள்ளடங்குவதாக இன்று வெளிவந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுறுதியான மேலும் 688 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 597,035 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 163 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568,373 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி