இலங்கை மக்களுக்கு மீண்டும் ஆபத்தா? தடுப்பூசியேற்றாதோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் மேலும் மூவருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
இந்த அறிவிப்பை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும் பேராசிரியருமான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். ஏற்கனவே ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதன் காரணமாக, அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.