இலங்கையில் மேலும் 537 பேருக்கு கொரோனா
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் இன்று 537 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 533,303 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இன்று மேலும் 360 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 493,674 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,543 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.