அபாய நிலையை மறந்த மக்கள்! ஆனாலும் கட்டுப்பாடு கிடையாது - அரசு திட்டவட்டம்
covid
sri lanka
people
prasanna ranathunge
By Vanan
மக்கள் அபாய நிலையை மறந்து மஹரகம, நுவரெலியா, சிகிரியா போன்ற பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காது செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும் சுற்றுலாத்துறையில் எவ்வித கட்டுப்பாட்டும் விதிக்காமல் வழமைபோல விமான நிலையங்கள் இயங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதை எடுத்தாலும் அரசாங்கத்தை குறை கூறும் பழக்கத்தை நாட்டு மக்கள் கொண்டுள்ளதாகவும், கொரோனா தொற்றை அரசாங்கம் கடந்த காலங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதும், அதன் ஊடாக கிடைந்த சுதந்திரத்தை மக்கள் தவறாகப் பயன்படுத்தியதால் நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை கொரோனா அபாயத்தை மறந்து புதுவருடத்தைக் கொண்டாடுமாறு அரசாங்கம் ஒருபோதும் நாட்டு மக்களிடம் கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்