மங்குனி அரசியல் படிமம் எங்கே? அநுர தரப்பிடமா? தமிழர்களின் முற்றத்திலா?
தித்வா சூறாவளி ஊடறுத்து சிதிலப்படுத்திய தீவில் பெறக்கூடிய ஆதாயங்களுக்கான அனைத்துலக சக்திகளின் ஓட்டங்கள் தீவிரப்படுகின்றன.
அந்தவகையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்துக்குப் பின்னர் இந்திய ராணுவத் தளபதியும் இந்தவாரம் இலங்கைக்கு வரவிருக்கிறார்.
இதேபோல வெனிசுலா மீதான அமெரிக்காவின் அடிக்கு இதுவரை நாட்டின் அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது வெளியுறவு அமைச்சரோ எந்த கண்டனத்தையும் வெளியிடவில்லை.
கடந்த காலத்தில் தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டமே அமெரிக்காவின் ஏகாதிபத்திய சதி என மூச்சு முட்ட முட்ட முழங்கிய அதே மார்ச்சிச ஜேவிபி; முகங்கள் உள்ள அரசாங்கமே இப்போது அமெரிக்காவை கண்டிப்பது குறித்து நினைக்ககூட இல்லை.
ஆனால் அரசாங்கம் இவ்வாறு கமுக்கம் காக்க அதே அரசின் முக்கிய உள்ளுடனாக உள்ள இடதுசாரி ஜேவிபி மட்டும் சிங்ளத்தில் கண்டித்து நழுவிக்கொண்டது.
மார்சிசவாதிகள் என ஒருகாலத்தில் பீற்றிய அநுர அரசாங்கத்தின் இவ்வாறான அமெரிக்க கமுக்க நிலை இது இரண்டாவது முறையாகும். கடந்த வருட யூனில் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய குண்டுத்தாக்குல் விடயத்திலும் சோ கோல்ட் அநுர அராங்கம் அமெரிக்காவை கண்டிக்கவில்லை.
அநுர அரசாங்கத்தின் இந்த கமுக்க நிலையை ஒருவகையில் பார்த்தால் சுயலாபத்தை அடிப்படையாக கொண்ட விவேகமான ராஜதந்திர( Prudent diplomacy ) நகர்வாகவும் இருக்கலாம்.
இதனால் தான் ஜேவிபி போன்ற அரசியல் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வேறுபட்டவை என்றும், அவர்கள் தங்கள் சொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்றும் ஜேவிபி அமைச்சர் விஜித ஹேரத் சொல்கிறார்.
கொழும்பின் இவ்வாறான நகர்வுகளை தமது அரசியல் உரிமை பிரச்சினைக்கு அனைத்துல அனுசரணையுடன் ஒரு குடியொப்ப வாக்கெடுப்பு கோரும் ஈழத்ததமிழர்களும் அவதானிக்க வேண்டும்.
தமது கோரிக்கைக்கு அனைத்துல அமுக்க மானியில் (பறோ மீற்றர்) தற்போது எந்தளவு அளவீடு உள்ளது என்பது குறித்தும் அந்ததரப்பு நினைத்துப்பார்க்கவேண்டும்.
யதார்த்தமாக தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான ஜனவரி 3 போராட்டத்துக்கு கூடிய கூட்டத்தை விட அதேநாளில் நகரில் நடந்த ஒரு உடுப்புக்கடைத் திறப்பு விழாவில் முதல் நாளே மலிவு ஆடைகளை அள்ள திரண்ட கூட்டம் அதிகமானது என்ற யதார்த்தை அரசியல் மற்றும் குடிசார் தலைமைகள் நோக்கவேண்டிய நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |