இரவு பகலாக தீட்டப்படும் திட்டம்- ரணில் காட்டில் கொட்டும் டொலர் மழை; மாறுமா அவல நிலை

Dollar to Sri Lankan Rupee Ranil Wickremesinghe Prime minister Sri Lanka
By Kalaimathy May 15, 2022 08:20 AM GMT
Report

சிறிலங்காவின் கஜானாவை டொலர்களால் நிரப்புவதற்கான வேலைத்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரவு பகலாக மேற்கொண்டு வருகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்காக பல நாட்டு தூதுவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தெரிரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல நாடுகள் நிதியுதவி வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில், நீண்ட காலத்திற்கு பின்னர் இலங்கைக்கு பெருமளவு கடனுதவியை வழங்க ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்திய வங்கியின் கஜானா நிறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

தாய்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளும் டொலர்களை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் அடுத்து வரும் நாட்களில் இலங்கையின் கைகளை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இந்தியா, சீனா போன்ற நாடுகளும் ஏற்கனவே உடன்பட்ட கடன் தொகையை விட பல மடங்கு அதிகமாக வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளும் தங்கள் சார்பில் கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றன. அடுத்து வரும் நாட்களில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நிலை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மட்டம் அதிகரித்து, ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முன்னர் இலங்கை கையிருப்பில் இருந்த டொலர்களின் மட்டத்திற்கு உயர்ந்து விடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அடுத்து வரும் வாரங்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.   

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்