அரசாங்கத்திற்கும் தொடர்பு என்பதை நிரூபித்துக் காட்டுவேன்- சூளுரைத்துள்ள ஹரின்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்புள்ளது என்பதை ஒரு நாள் நிரூபித்து காட்டுவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சூளுரைத்துள்ளார்.
பதுளையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்பதை தெளிவாக நிரூபித்து காட்ட போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernado) தெரிவித்துள்ளார்.
தாம் செய்த குற்றம் நினைவிற்கு வரும் போது, அரசாங்கத்தில் உள்ள எந்த தலைவர்களுக்கும் இரவில் நித்திரை வருவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக நான் கூறி வரும் விடயங்களில் எந்த இடத்தில் தவறாக கூற போகிறேன் என்பதற்காக அரசாங்கம் காத்திருக்கின்றது. அவ்வாறு தவறாக கூறியதும் என்னை கைது செய்ய தயாராக இருக்கின்றனர்.
அப்படி நான் வார்த்தைகளை தவறவிட மாட்டேன். அந்த குற்றத்தின் பலாபலன்கள் காரணமாக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்து வருகின்றன எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.