நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்- நீதிமன்றின் உத்தரவு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 63 பேரையும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 64 பேரும் பொலநறுவை, அநுராதபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கடந்த மாதம் சஹ்ரானின் மனைவி பிணை மனுதாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 19 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்