வெளிச்சத்துக்கு வரவுள்ள மறைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் - சிக்கப்போவது யார்?
srilanka
easter
investigation
By Vasanth
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான மறைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்த தாக்குதல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த அறிக்கையினை அச்சிடும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 15 மாத காலப்பகுதியில் 450க்கும் மேற்பட்ட நபர்களிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்