அல்கொய்டா மற்றும் தலிபான்களுடன் தொடர்புடைய குழு இலங்கையில்?
srilanka
eastern
province
By Vasanth
அல்கொய்டா மற்றும் தலிபான் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையின் மற்றுமொரு அமைப்பு பற்றிய விசாரணைகளை புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளது.
இஸ்லாமிக் ரிலிஜ் ஏஜன்ஸி எனப்படும் இந்த அமைப்பு, கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்டு தற்போதும் இயங்கிவருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புலனாய்வுப்பிரிவு நடத்திய விசாரணையில், கட்டார், சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பல்வேறு அமைப்புக்களிடம் இருந்து சுமார் 24 கோடி ரூபா நிதி குறித்த அமைப்பிற்கு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இன்று சனிக்கிழமை வெளியாகிய திவயின பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.