இலங்கைக்கு விரைவில் மீட்சி - இந்தியாவின் வலிமையான நம்பிக்கை!
பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியம் குறித்த விவகாரங்களில் இலங்கை மக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவினை வழங்கும் என இந்தியா தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என்றும் சிறிலங்காவிற்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் நம்பிக்கை வெளியிட்டார்.
பொருளாதாரத்தில் நம்பிக்கை

இலங்கையின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன் போது, இது போன்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அமர்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக இடம்பெறுவது மிகவு சிறிப்பாக இருக்கும் எனவும், அவ்வாறு அதனை ஒழுங்கமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆணித்தரமான வெளிப்பாடு

இத்தகைய திறைசேரியின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்புமன்ற முயற்சியினை பாராட்டியுள்ளார். மேலும் இவ்வாறான அமர்வுகளை 6 மாதங்களுக்கு ஒரு தடவை ஒழுங்கமைக்க வேண்டுமென்ற முன்மொழிவுக்கு தனது ஆதரவினையும் வழங்கியுள்ளார்.
அத்துடன் இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என மீண்டும் ஆணித்தரமான நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.