உச்சம் தொட்ட முட்டை விலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka
Economy of Sri Lanka
Egg
By Shalini Balachandran
சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முட்டை விலை
இதனடிப்படையில், முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், முட்டைக்கான நியாயமான விலையை நிர்ணயம் செய்து முட்டை உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்