இலங்கையர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நிலை
இனம், மதம்,கட்சி, வேறுபாடுகள் இருக்கும் வரை நாம் வளர்ந்த நாடாக மாற முடியாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அதிபர் சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
மன்னார் சிலாவத்துறை இன்று (11) நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் விஜயதாச ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
இலகுவான காரியம் இல்லை
“கட்சிகள், நிறங்கள், மதங்கள், சின்னங்கள் என தற்போது உள்ள பிளவுகளால் மக்கள் மத்தியில் பிளவுகள் நிலவும் வரையில் அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவது இலகுவான காரியம் இல்லை.
பாதுகாப்பான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக கடுமையான சட்ட நிபந்தனைகளைக் கொண்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி பயங்கரவாத தடைச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது.
அதற்கு எதிராக சிலர் செயற்படுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் ஈஸ்டர் தாக்குதல், தொற்று நோய், நிலைமைகள் மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தற்போதைய அதிபரின் தலைமையில், எட்டு மாத குறுகிய காலத்தில், நாடு அனைத்து வழிகளிலும் முன்னேறியுள்ளது.
குறுகிய காலத்தில் முன்னேற்றம்
பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்ததை விடவும் முன்னேறியுள்ளது.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
எனவே ஒவ்வொருவரும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதிக்க வேண்டும்” - என்றார்.
