கிளிநொச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணம்: வெளியான தகவல்
கிளிநொச்சியில் வெள்ள அனர்த்ததிற்கான நிவாரணமாக நான்கு பிரதேச செயலகங்களிற்கும் 277மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வைப்பிலிடும் பணிகள்
மேலும் தெரிவித்த அவர் “மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடுகளினை சுத்தப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் 25000 ரூபா பணம் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 2153 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக வைப்பில் இடப்பட்டுள்ளன.
500 மாடுகளும் மற்றும் 200 ஆடுகளும் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |