தனித்துப் போட்டியிடவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி !
எதிர்வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து கூட்டணியாக போட்டியிடுவதை விடுத்து தனித்துப் களமிறங்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது .
இதன் முதல்கட்டமாக நாளைய தினம் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர் தெரிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இ ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara), அமைச்சர் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera), இராஜாங்க அமைச்சர் துமிந்த சில்வா(Duminda Silva), நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா(De Silva by Shaun Wijel) மற்றும் கட்சியின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச (Rohana Laxman Piyadasa)ஆகியோர் அடங்கிய குழுவொன்றை நேர்முகத் தேர்வினை நடாத்துவதற்கு கட்சி நியமித்துள்ளது.
எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
25 மாவட்டங்களைச் சேர்ந்த 300 பேர் அமைப்பாளர் பதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் இவர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது..
படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கட்சி தெரிவித்துள்ளது . அனுபவம் மிக்க அரசியல்வாதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என கட்சித் தகவல்கள் கூறுகின்றன.