டொலரில் சம்பாதிப்பவர்களுக்கு வரி - அமைச்சர் வெளியிட்ட தகவல்
இணையம் மூலம் வெளிநாட்டு நாணயம் சம்பாதிப்பவர்களுக்கு தனது அரசாங்கம் வரி விதிக்கவில்லை என அநுர அரசு விளக்கமளித்துள்ளது.
மாறாக முந்தைய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரியைக் குறைத்ததாக பொருளாதார பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரி இல்லாத சேவைகள்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முந்தைய அரசு இந்த சேவைகளுக்கு 30% வரி விதித்ததாகவும், தனது அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் சமீபத்திய சட்டத்தின்படி, வரி இல்லாத சேவைகள் வழங்கப்படுவதில்லை என்றும், ஒரு நாடு வழங்கும் சேவைக்கு அந்த நாடு வரி விதிக்கவில்லை என்றால், அந்த சேவையைப் பெறும் நாடு அந்த வரியை விதிக்கும்.
அதன்படி, இந்த வரியை நாம் வசூலிக்கவில்லை என்றால், வேறு யாராவது வசூலிப்பார்கள் என பொருளாதார பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
