தீர்மானத்தை முற்றாக நிராகரிக்கிறோம் -ஜெனிவாவில் அறிவித்தது ஸ்ரீலங்கா அரசு
srilanka
geneva
2019
By Vasanth
ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள மனித உரிமை பேரவை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐ.நா வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சந்திர பிரேமா இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு எதிராக சீனா கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
இதேவேளை ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக அறிவித்துள்ள அதேவேளை வாக்களிப்பில் இருந்து விலகுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.