மற்றுமொரு பதவியையும் தூக்கியெறிந்த கம்மன்பில!
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அரசாங்கத்தின் மற்றுமொரு பதவியில் இருந்த விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கம்மன்பில அரச தலைவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சீதாவாக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்தே அவர் விலகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளதால், மற்றுமொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியான பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்பது பொருத்தமற்றது என கம்மன்பில தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தனர் என்ற குற்றச்சாட்டில் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை கோட்டாபய அமைச்சு பதவிகளில் இருந்து அண்மையில் பதவி நீக்கம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்