முக்கிய அமைச்சின் ஆலோசகரான தென் பகுதி பிக்குவின் செயலால் கடும் ஆத்திரத்தில் மக்கள்!
அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கிய விகாரைக்கு அருகில் உள்ள அரச காணியின் ஒரு பகுதியை தென் பகுதியை சேர்ந்த முக்கியமான பிக்கு ஒருவர் வெளி நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
முக்கிய பிரமுகர்களுக்கு மாத்திரம் ஜோதிடம் பார்க்கும் தொழிலை செய்து வரும் இந்த பிக்கு, நாட்டின் முக்கிய அமைச்சு ஒன்றின் ஆலோசகர் பதவியை வகித்து வருகிறார்.
இந்த பிக்கு அரசு வழங்கிய காணியின் ஒரு பகுதியை அருகில் இருக்கும் மற்றுமொரு காணியின் உரிமையாளருக்கு விற்பனை செய்துள்ளார்.
அறநெறி பாடசாலை கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு காணி தேவை என விடுத்த கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் இந்த காணியை வழங்கியுள்ளது.
காணியின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டுள்ளதால், அறநெறி பாடசாலைக்கான புதிய கட்டிடத்தை நிர்மாணிக்க போதுமான இடவசதியில்லை என தெரியவருகிறது.
அத்துடன் காணி வெளி நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதேச மக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
