அரசாங்கத்தை விடவும் அரசியலமைப்பு சக்தி வாய்ந்தது அதனுடன் விளையாட வேண்டாம்- விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

sajith sri lanka government amparai gotabaya
By Kalaimathy Apr 18, 2022 08:44 AM GMT
Report

நாட்டின் அரச தலைவர், பிரதமர், அரசாங்கத்தை விடவும் அரசியலமைப்பு சக்தி வாய்ந்தது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், ஜனநாயக ரீதியில் போராடும் மக்களுக்கு எதிராக அச்சுறுத்தல், அடக்குமுறை மற்றும் மேலாண்மையை பிரயோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால் போராடும் மக்கள் முன்னிலையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் கேடயமாக மாறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசியலமைப்பின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது  கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் மஹிந்தவிற்கும், ராஜபக்ச குடும்பத்திற்கும், அரசாங்கத்துக்கும் கூட அதிகாரம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாளிகையில் வசிக்கும் அரச தலைவருக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ, மக்களின் போராட்டக் குரல் கேட்கவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் போராட்டத்தின் அனைத்து கோரிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி உணர்ந்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

குற்றப்பிரேரணை, நம்பிக்கையில்லாப் பிரேரணை போன்று 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்துவிட்டு 19 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கும் கூட தான் உறுதியாக இருப்பது அதனாலயே எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஓர் மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் 'ஜன சுவய' திட்டத்தின் கீழ் “சத்காரய” திட்டத்தின் 49 ஆவது கட்டமாக, இருபத்தியாறு இலட்சத்து ஐம்பத்து மூன்றாயிரம் ரூபா (ரூ.2,653,000) பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள்  அம்பாறை திருக்கோவில் வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டன.

அதனடிப்படையில், 

*ரூபா 143,000 பெறுமதியான ECG Recorder இயந்திரங்கள் ஒன்றும்,

*ரூபா 375,000 பெறுமதியான Multipara Monitor இயந்திரங்கள் இரண்டும்,

*ரூபா 520,000 பெறுமதியான ECU Bed ஒன்றும்,

*ரூபா 1,240,000 பெறுமதியான CRAP இயந்திரம் ஒன்றுமே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு 'எதிர்க்கட்சியின் மூச்சு" நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இது வரை 48 கட்டங்களில் 1289 இலட்சம் (128,997,900) ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளன.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026