கடும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை! எதிர்க்கட்சி எச்சரிக்கை (படங்கள்)
பொய்கள் மேலோங்கி வருவதாகவும், அதன் விளைவாக நாடு தீவிர ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட வண்ணமுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கட்டுகம்பொல - பன்னல - நாலவலான பல்வலகும்புர சிறி விஜயராம விகாரையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைத்திய கோபுர திறப்பு விழா எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பொய்கள், கட்டுக்கதைகள் மூலம் நாட்டை நடத்தும் அரசாங்கம் நாட்டை பொய்யாக்கி மக்களை வீதியில் தள்ளியுள்ளதாகவும், வரிசைகள் யுகத்தில் நிற்கும் மக்கள் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர்.
தொலைநோக்கு உறுதிப்பாடுகள் காரணமாக இன்று தரிசு நாடுகள் ஆபிரிக்காவின் சிங்கப்பூர் ஆகிவிட்டது.
நச்சு இரசாயன குண்டுகளால் அழிந்த வியட்நாம் விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றது. இத்தனைக்கும் மத்தியில் இலங்கை நாளுக்கு நாள் சீரழிந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








