ஜெனிவாவில் ஸ்ரீலங்காவை கைவிடுகிறதா இந்தியா? ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை

srilanka india human rights attanayake
By Vasanth Mar 24, 2021 04:10 PM GMT
Report

ஜெனிவாவில் ஸ்ரீலங்காவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காவிட்டால் அது பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என்றும் அயல் நாடான இந்தியா எம்முடன் இணைந்திருந்தால் மாத்திரமே ஸ்ரீலங்காவின் பலம் அதிகரிக்கும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர், ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் ஸ்ரீ எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யோசனை ஸ்ரீலங்காவிற்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

குறித்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்காவிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து மிக அவதானமாக செயற்பட வேண்டும்.

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் ஸ்ரீலங்காவின் உள்ளக விவகாரங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.

நிர்வாக நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல காரணிகள் அவற்றில் உள்ளடங்குகின்றன.

இவை எம்மால் திருத்திக் கொள்ளக் கூடியவையாகும். எனவே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காது அனைத்தும் ஒன்றாக்க முயற்சிக்கும் போது தான் சிக்கல் ஏற்படுகிறது.

அதற்காக இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை முழுமையாக சரி என்று நாம் கூறவில்லை.

இது தொடர்பில் இலங்கை இராஜதந்திர மட்டத்தில் சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதே பொறுத்தமானதாகும்.

அவ்வாறில்லை எனில் பல அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். குறித்த யோசனையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கை மீது பயணத்தடை , பொருளாதாரத்தடை அல்லது வேறு ஏதேனும் தடைகளை விதிக்கப்பட்டால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர்.

நாடு மற்றும் மக்களைப் பற்றி சிந்தித்து உரிய முறையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் கூறவில்லை.

எம்மால் இயன்ற மாற்றங்களை செய்வதற்கு இராஜ தந்திர ரீதியில் செயற்படுமாறே வலியுறுத்துகின்றோம். ஜெனிவாவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் அது எமக்கு பாதகமான நிலைமையை ஏற்படுத்தும்.

எமது அயல் நாடான இந்திய எம்முடன் இணைந்திருந்தால் மாத்திரமே எமக்கு பலம் அதிகரிக்கும். எனவே இந்தியாவின் ஆதவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும்.

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்குமெனில் அதற்கான காரணம் நாம் அந்நாட்டுடன் நட்புறவைப் பேணுவதற்கு பதிலாக விலகியுள்ளமையே ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை சில உள்ளக விவகாரங்கள் தொடர்பில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கக் கூடும்.

எனவே அவ்வாறான அழுத்தங்களிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்காமல் காலம் தாழ்த்துவதற்கான காரணம் என்ன? இது வெளியுறவுகளில் காணப்படும் பாரிய வீழ்ச்சியாகும்.

ஸ்ரீலங்காவிற்கு எதிரான பிரேரணை வெற்றி பெற்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பது எமக்குத் தெரியாது.

எனினும் பல அழுத்தங்கள் நாட்டின் மீது பிரயோகிக்கப்படும். பயணத்தடை உள்ளிட்ட தடைகள் விதிக்கப்பட்டால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும்.

காரணம் ஸ்ரீலங்கா உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் நிலைமை உள்ள நாடு அல்ல. அதற்கான பலம் எம்மிடம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே ஸ்ரீலங்காவின் சுயாதீனத்தன்மையை பாதுகாத்துக் கொண்டு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.  

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025