அதிகரிக்கப்பட்ட வணிகப் பொருட்களின் ஏற்றுமதி! வெளியாகியுள்ள தகவல்
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வணிகப் பொருட்களின் அளவு அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் இவ்வாறாக வணிகப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக அந்த சபை கூறியுள்ளது.
இதன்படி, பெப்ரவரி மாதத்தில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன், கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது சராசரியாக 0.17 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.
ஏற்றுமதி செயல்திறன்
ஜனவரி 2024 உடன் ஒப்பிடும் போது, 2024 பெப்ரவரியில் ஏற்றுமதி செயல்திறன் 1.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பெப்ரவரி 2023 உடன் ஒப்பிடும் போது, விவசாய ஏற்றுமதி 11.82 வீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டி 255.76 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |